This Article is From Jul 03, 2018

ஷங்கர் மஹாதேவனை ஈர்த்த தொழிலாளியின் பாடல்: வைரல் வீடியோ

கடந்த சில மாதங்களாக கிளாசிக்கல் மியூசிக்கில் பயிற்சிப்பெற்று வருவதாக கூறும் ராகேஷ் இதற்கு முன் இசைக் கற்கவில்லை என்று கூறுகிறார்

ஷங்கர் மஹாதேவனை ஈர்த்த தொழிலாளியின் பாடல்: வைரல் வீடியோ

கேரளாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளி ஒருவரின் பாடல் வீடியோ வைரலாக பரவியது. அவரது அந்த வீடியோ ஹிட் பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மஹாதேவனை வரை சென்று சேர்ந்துள்ளது. நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தியின் படி, ராகேஷ் உன்னி என்பவர் ,விஷ்வரூபம் படத்தில் வரும் “உன்னை காணாது நான்” என்னும் தமிழ் மெலோடிப் பாடலை பாடிய வீடியோ வெள்ளிக்கிழமை வைரலானது. அந்த் வீடியோவை பார்த்த ஷங்கர் மஹாதேவன், ராகேஷுக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். ராகேஷ் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் குவைத்தில் இருக்கும் அவரது சகோதரியின் கணவர் கூறிய பின்னரே தனது வீடியோ வைரலானது தெரியும் என்கிறார்.

“ ரப்பர் வெட்டி அதை எடுத்துக் கொண்டு ஒரு டிரக்கில் ஏற்றுவது தான் என் வேலை, " என்று அவர் நியூஸ் மினிட்டிடம் கூறியுள்ளார், மேலும் இந்த வீடியோவை தான் பாடும் போது, ஷமீர் என்ற அவரது நண்பர் எடுத்தது என்று அவர் கூறினார்.

ராகேஷின் அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவரை பற்றி யாருக்காவது தெரியுமா என்று கேட்டிருந்தார். அதன் பிறகு தான் ராகேஷ் பற்றிய தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. “ஷங்கர் மஹாதேவன் தொலைபேசியில் என்னை அழைத்து பேசியதை எனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன். அவர் எனக்கு நல்ல குரல் உள்ளதாகவும், நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகவும் கூறினார். நான் அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நாம் பார்க்க மாட்டோம், நாம் ஒன்றாக பாடுவோம், என்று கூறியதாக ராகேஷ் நெகிழ்ச்சியில் கூறுகிறார். கடந்த சில மாதங்களாக கிளாசிக்கல் மியூசிக்கில் பயிற்சிப்பெற்று வருவதாக கூறும் ராகேஷ் இதற்கு முன் இசைக் கற்கவில்லை என்று கூறுகிறார்.

இண்டர்நெட்டில் ஒரு பாடகரின் வீடியோ வைரலாகப் பரவி புகழை அடைவதற்கு உதவியது இது முதல் தடவை அல்ல. சரியாக ஒரு வருடம் முன்பு, ஹால்ட்வானிக்கு செல்லும் வழியில் ஒரு ரயில் நிலையத்தில் பாடும் ஒரு மனிதனிதனின் வீடியோ ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெட்ஸைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.