This Article is From Aug 21, 2018

கேரள வெள்ளத்திற்கு, வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததால் மக்கள் அச்சம்

ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

கேரள வெள்ளத்திற்கு, வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்ததால் மக்கள் அச்சம்
Thiruvananthapuram:

திருவணந்தபுரம்: கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், கேரளாவில் பெய்த மிக கனமழை முடிவுக்கு வந்தது. வெள்ளத்தால் சூழ்ந்த இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ளதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்புகின்றனர்.

வெள்ளத்தால் தண்ணீர் தேங்கி இருப்பதால், பாம்புகளும், முதலைகளும் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன. இதுவரையில், எர்ணாக்குளம் மருத்துவமனையில் மட்டும் 52க்கும் மேற்பட்டோர் பாம்பு கடியால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், விஷ எதிர்ப்பு தன்மையுள்ள மருந்துகளை மக்களுக்கு விநியோகிக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. வீட்டை சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.