This Article is From Mar 26, 2020

காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதன்கிழமை முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

கொரோனாவால் இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.(File)

ஹைலைட்ஸ்

  • காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு!
  • உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
  • அவருடன் தொடர்பில் இருந்த 70க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Srinagar:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

இதுதொடர்பாக ஸ்ரீநகர் மேயர் ஜூனைத் ஆசிம் மாத்து தனது ட்வீட்டர் பதிவில், கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு குறித்த சோகமான செய்தியை பகிரும்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் பற்றியே எனது இதயம் நினைக்கிறது. நாங்கள் உங்களுடன் இருந்து இந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

துணிச்சலான மருத்துவர்களின் முயற்சிக்காக அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து, எங்களால் முயன்றதை செய்வோம். சங்கிலியை உடைத்து வீட்டிலேயே இருக்க உதவுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த நான்கு பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், 7 மருத்துவர்களும், 70க்கும் மேற்பட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜம்மு - காஷ்மீரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் பயண வரலாற்றை மறைத்து வைத்திருப்பானால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கலாம் என காஷ்மீரி அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்டுள்ள தகவலின்படி, 5,124க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மற்றும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3,061 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும் (அரசு இயக்கும் இடங்களிலும்), 80 பேர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் மற்றும் 1,477 வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்

.

n9v9vu44

உலகளவில் கொரோனாவுக்கு 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 4லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதன்கிழமை முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 

காஷ்மீரில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகரில் பல சாலைகளை மூடி, ஊரடங்கை அமல்படுத்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்கள் முழுவதும் தடைகளை அமைத்தனர்.

With input from PTI

.