This Article is From Aug 12, 2019

'வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடாது'! சீனாவை எச்சரிக்கும் இந்தியா!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

'வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக்கூடாது'! சீனாவை எச்சரிக்கும் இந்தியா!!

சீனாவில் மத்திய வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Beijing:

காஷ்மீர் விவகாரத்தில் சீனா அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், வேறுபாடுகள் பிரச்னையை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அமைப்பதற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அரங்கில் இந்த விவகாரத்தை எழுப்பியது. இதேபோன்று சீனாவும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக லடாக் பிரதேசம் சீன எல்லையை ஒட்டி வருகிறது. இதனை யூனியன் பிரதேசமாக மாற்றுவதில் சீனாவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கிறது. இதுபற்றி சீனா கருத்து தெரிவித்ததற்கு, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்று மத்திய அரசு பதிலடி கொடுத்தது. 

இந்த நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இப்போது இந்தியாவின் தரப்பில், 'இந்தியா - சீனா இடையே வேறுபாடுகள் உள்ளன. இவை ஒருபோதும் பிரச்னையாக மாறி விடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச அரங்கில் இந்தியாவும் - சீனாவும் முக்கிய நாடுகளாக உள்ளன. 

2 ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. உலக நாடுகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த சூழலில் இந்தியா - சீன உறவு என்பது சர்வதேச பிரச்னையை தீர்க்கும் வகையில் இருக்கும் என பேசப்பட்டது' என்று ஜெய்சங்கர் கூறினார். 

வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பேற்கும் முன்னதாக சீனாவுக்கான வெளியுறவு அமைச்சராக இருந்திருந்தார். அமெரிக்காவுக்கும் ஜெய்சங்கர் தூதராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.