This Article is From Mar 06, 2019

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா மற்றும் சுந்தர்பானி செக்டர் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Rajouri:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்த்தில் உள்ள நவ்ஷெரா மற்றும் சுந்தர்பானி செக்டார் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இன்று மட்டும் 6-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இன்று காலை சரியாக 10.30-க்கு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது. சிறிய ரக ராக்கெட் வெடிகுண்டுகள் இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஜம்மு நகரத்தில் இருந்து சரியாக 159 கிலோ மீட்டர் தொலைவில் சண்டை நடந்திருக்கிறது. 

அதனைச் சுற்றி 5 கிலோ மீட்டர் அளவுக்கு உள்ள பள்ளிகள் அனைத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் எல்லையோர கிராம மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 4.30-க்கு தாக்குதல் நடைபெற்றது. நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தனது அத்துமீறலை நிறுத்தவில்லை. நேற்று நவ்ஷெராவில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி என்ற இடத்தில் மாலை 6-8.15 மணி வரையில் அத்துமீறல்கள் தொடர்ந்தன. 

புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழப்பு, அதற்கு அடுத்து நடைபெற்ற விமானப்படை தாக்குதல், அபிநந்தன் சிறைபிடிப்பு அதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் ஆகியவற்றால் எல்லையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. 
 

.