This Article is From Jan 27, 2019

கர்நாடகா : ''ஒருவரை இழுத்தால் 10 எம்.எல்.ஏ.க்களை தூக்குவோம்'' - பாஜகவுக்கு காங். சவால்

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சியை கவிழ்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக கூறி வருகிறது.

கர்நாடகா : ''ஒருவரை இழுத்தால் 10 எம்.எல்.ஏ.க்களை தூக்குவோம்'' - பாஜகவுக்கு காங். சவால்

கட்சி எம்.எல்.ஏ.க்களை மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

New Delhi:

''ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்தால் 10 எம்.எல்.ஏ.க்களை உங்களிடம் இருந்து பறித்து விடுவோம்'' என பாஜகவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது. இங்கு ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார், தங்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்களிடம் பாஜக மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆபரேஷன் லோட்டஸை நடத்தி கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதகாவும் கூறியிருந்தார். 

கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறுகையில், ''எங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக விலை பேசியுள்ளது. பெரிய பணத்தை கூறி அதை எங்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக எங்களது எம்எல்ஏக்களிடம் கேட்டுள்ளது. அந்த தொகையை நீங்கள் அறிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள். ஆனால் எங்கள் எம்எல்ஏக்கள் எந்தப் பணமும் வேண்டாம் என்று கூறி விட்டனர்'' என்றார். 

கர்நாடக எம்எல்ஏக்கள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

ஆப்பரேஷன் லோட்டஸை கர்நாடக பாஜக நடத்தி வருகிறது. 2008-ல் எட்டியூரப்பா இதனை செய்தார். அது மீண்டும் நடக்கிறது. இதில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஈடுபட்டு வருகின்றன. எங்கள் அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர். யாரும் இங்கு விலைபோக மாட்டார்கள். இங்கிருந்து ஒரு எம்.எல்.ஏ.வை பாஜக இழுத்தால் அவர்களிடம் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் இங்கு வந்து விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

.