This Article is From Jul 11, 2019

நான் பதவி விலக வேண்டிய அவசியம் என்ன? : எச்.டி குமாரசாமி

கடந்த சில நாட்களில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததுள்ளதால் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியமைப்பதில் சிக்கலில் உள்ளது.

“நான் இப்போது ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Bengaluru:

கர்நாடாக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி 18 ராஜினாமாக்களுக்குப் பிறகு தனது கூட்டணி அரசு ஆட்சியமைப்பதற்கான போதுமான பெரும்பான்மை உள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் “நான் இப்போது ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் முதலமைச்சராக இருந்த பாஜக கர்நாடக தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் நடந்ததை எடுத்துக் காட்டாக மேற்கோள் காட்டினார். 

“2009-10 ஆம் ஆண்டில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது எட்டு அமைச்ச்சர்கள் உட்பட18 எம்.எல்.ஏக்கள் அவரை எதிர்த்தனர். இறுதியில் என்ன நடந்தது” என்று குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறி விலகிச் சென்றார். எடியூரப்ப காங்கிரஸ்ஸை குற்றம் சாட்டினார். குமாராசாமி ஆட்சி அமைப்பதை தவிர்க்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கர்நாடக தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதில் 48 மணி நேரத்திற்கு பிறகு முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. 

கடந்த சில நாட்களில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததுள்ளதால் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியமைப்பதில் சிக்கலில் உள்ளது. 

கர்நாடக சட்டசபை சபா நாயகர் ரமேஷ் குமார் இன்னும் ராஜினாமாக்களை ஏற்கவில்லை. 

.