’எடியூரப்பாதான் முதல்வராகனும்’ பாஜக எம்பி 1008 படியேறி வேண்டுதல்

ஷோபா கரண்லாஜ்ஜே பிங்க் நிற சேலையில் 1,008 படிகள் ஏறி மைசூரில் உள்ள சாமூண்டிஸ்வரி கோயிலுக்கு படியேறி சென்று எடியூரப்பாதான் முதல்வராக வேண்டுமென வேண்டுதல் செய்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
’எடியூரப்பாதான் முதல்வராகனும்’ பாஜக எம்பி 1008 படியேறி வேண்டுதல்

உடுப்பி -சிக்மங்களூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்லாஜ்ஜே

Bengaluru: 

கர்நாடக முதல்வராக எடியூரப்பா வரவேண்டும் என வேண்டுதல் செய்து சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு 1008 படிகள் ஏறிச்சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் பாஜக எம்.பி ஷோபா கரண்லாஜ்ஜே. 

ஷோபா கரண்லாஜ்ஜே பிங்க் நிற சேலையில் 1,008 படிகள் ஏறி மைசூரில் உள்ள சாமூண்டிஸ்வரி கோயிலுக்கு படியேறி சென்று எடியூரப்பாதான் முதல்வராக வேண்டுமென வேண்டுதல் செய்துள்ளார்.

உடுப்பி -சிக்மங்களூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்லாஜ்ஜே. பாஜகவைச் சேர்ந்த சிலரும் இந்த வேண்டுதலில் உடன் படியேறினனர். பழமையான சாமூண்டீஸ்வரி கோயில் 3,300 அடி உயரத்தில் உள்ளது.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் இருந்து வருகிறது. 14 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமாவைக் கொடுத்துள்ளனர். சபாநாயகர் அதை  இதுவரை ஏற்காத நிலையில் தங்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டுமென பாஜக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தை நடத்தியது.  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில் நடைபெறவில்லை.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................