This Article is From Jun 15, 2018

கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுத்த கமல்

அரசின் செயற்பாட்டில் தலையிடுவது “ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத” ஒன்று என கூறினார்.

கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுத்த கமல்

Kamal Haasan tweeted interference in the work of a government is unacceptable (File)

ஹைலைட்ஸ்

  • டில்லி முதலமைச்சரின் தர்ணா போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு
  • அரசின் செயற்பாட்டில் தலையிடுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது
  • முன்னதாக, ராஷ்ட்ரிய லோக் தால் கட்சியினரும் திரு.கேஜ்ரிவாலுக்கு அதரவு
New Delhi:

டில்லியில் நடக்கும் அரசுக்கு எதிராக மத்திய அரசு கொடுக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் எச்சூரி கூறியதாவது, “மத்திய அரசு துணைநில ஆளுநரை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணியாற்ற விடாமல் செய்கிறது” என்று கூறினார்.

கடந்த திங்கட்கிழமை அன்று, டில்லி முதலமைச்சர் மற்றும் மூன்று அதிகாரிகள் மனிஷ் சிசோடியா, கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் டில்லி துணைநில ஆளுநர் அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளை மீண்டும் தொடங்கவும்,  வீட்டுக்கு வீடு ரேஷன் திட்டதிற்கான துணைநில ஆளுநரின் ஒப்புதல் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம், திரு.கமல்ஹாஸன் ‘மக்கள் நீதி மைய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயற்பாட்டில் தலையிடுவது “ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத” ஒன்று என கூறினார்.
“டில்லி மற்றும் புதுச்சேரியில் நடக்கும் நடக்கும் நிகழ்ச்சிக்ளுக்கு எந்த வேறுபாடும் இல்லை. நல்லதொரு மாற்றத்தை வேண்டும் மக்கள் விரக்தியடைகின்றனர்” எனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், டெல்லி மற்றும் புதுச்சேரியில், சர்வாதிகார ஆட்சி ஜனநாயகத்தை கேலியாக்குகிறது என கூறினார்.

அர்விந்த் கேஜ்ரிவாலிற்கு ஆதரவாக பேசிய ரிபெல் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவ், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பல காரணங்களால் இயங்கவிடாமல் செய்யப்படுகிறது என்றார்” மேலும், “டில்லியில் நடைப்பெற்று வரும் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தலையிட்டு இதற்கான தீர்வை விரைவில் கொடுக்க வேண்டும். இதனால் டில்லி மக்கள் நிம்மதியாக இருப்பர்” என தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து துணைநில ஆளுநரை சந்திக்க டில்லி முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் டில்லியின் துணைநில ஆளுநர் அனில் பாய்ஜால் முதலமைச்சரை காண மறுப்பது கண்டனத்திற்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, டில்லி பகுதி தெரிவித்தது.

“அரசியலமைப்பு அதிகாரத்தில் இருக்கும் எந்த அதிகாரியும் , குறிப்பிட்ட கட்சி அல்லது சித்தாந்தம் சார்ந்து இயங்க கூடாது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்க கூடாது” என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது

டில்லி துணைநில ஆளுநர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் டில்லி முதலமைச்சருக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என திரினாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறினார்.

முன்னதாக, ராஷ்ட்ரிய லோக் தால் கட்சியினரும் திரு.கேஜ்ரிவாலுக்கு அதரவு அளித்தனர்.

 

 
 

.