தாயின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை : உறுதிமொழி ஏற்க உதவிய நீதிபதி

பலர் நீதிபதியின் மனிதாபிமான செயலை பாராட்டினர். மற்ற பலரும் பெண்ணின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தாயின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை : உறுதிமொழி ஏற்க உதவிய நீதிபதி

குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு வாசிக்கும் நீதிபதி.


ஒரு தாயாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும் அது ஒரு மிகப்பெரிய பொறுப்பும் கூட. அந்த பொறுப்புடன் தாய் தன்னுடைய தொழில்சார் வேலைகளையும் சிறப்புடன் செய்வது சாதரணமானது அல்ல. இணையத்தில் பெண் ஒருவர் தன் குழந்தையுடன் வழக்கறிஞராக பட்டம் பெறுகிறார்.

ஒப்புதல் உறுதிமொழியை படிக்கும் போது நீதிபதி குழந்தையை பெற்றுக் கொண்டு உறுதிமொழி ஏற்க உதவுகிறார். நீதிபதி ரிச்சர்ட் டிக்கின்ஸ் ஜூலியானா லாமருக்கு ஒப்புதல் உறுதிமொழியை படிக்கும்போது குழந்தையை ஒரு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பதைக் காணலாம். 

இந்த வீடியோ ட்விட்டர் பகிரப்பட்ட பின் 70,000பேர் பார்வையிட்டுள்ளனர். லாமர் ஃபாக்ஸ் என்ற பெண் தன்னுடைய பட்டமளிப்பு விழாவில் தன் மகனும் அங்கமாக இருக்க வேண்டுமென விரும்புதாக கூறவும். நீதிபதி குழந்தையை தானே வாங்கிக் கொண்டு உறுதிமொழி ஏற்க உதவுகிறார். 

பலர் நீதிபதியின் மனிதாபிமான செயலை பாராட்டினர். மற்ற பலரும் பெண்ணின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

Click for more trending news


More News