ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ. வினய் துபே திடீர் ராஜினாமா!!

இன்று காலையில் ஜெட் ஏர்வேஸ் துணை தலைமை செயல் அதிகாரி அமித் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று ஜெட் ஏர்வேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ. வினய் துபே திடீர் ராஜினாமா!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜெட் ஏர்வேஸின் துணை தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) அமித் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது தலைமை செயல் அதிகாரி வினய் துபே பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. 

தனிப்பட்ட காரணங்களுக்காக வினய் துபே பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்திருக்கிறது. போதிய பணப்புழக்கம் இல்லாததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணங்கள் ஜெட் ஏர்வேஸ்-சின் சரிவுக்குக் காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் கடன் சுமையால் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சரிவடைந்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அளிப்பவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். தற்போது, அவர்கள் வழங்கிய கடன்களை மீட்க அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் (எஸ்பிஐயின் ஒரு அங்கம்) ஜெட் ஏர்வேஸை ஏலத்தில் எடுக்க எடிஹாட் ஏர்வேஸ் மற்றும் 3 நிறுவனங்கள் ஏலத்தில் பெற முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குகளை பெறுவதற்கு தங்கள் கோரிக்கைகளை சமர்பிக்க வெள்ளியன்றே கடைசி நாளாகும்.

இந்த நிலையில் சி.இ.ஓ. மற்றும் துணை சி.இ.ஓ. ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அடுத்ததாக ஜெட் ஏர்வேஸில் என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. 

More News