பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தாரா? - பாக். ஊடகங்கள் என்ன சொல்கிறது?

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் சிகிச்சை மேற்கொள்வது குறித்து எந்த தகவலும் இல்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தாரா? - பாக். ஊடகங்கள் என்ன சொல்கிறது?

2000ல் மசூத் அசார் தீவிரவாத ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை உருவாக்கினார்.

Lahore/New Delhi:

இந்தியாவால் அதிகம் தேடப்படுபவனும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவனுமான மசூத் அசார் உயிரிழக்கவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக பரவும் தகவல் பொய்யானது என ஜியோ உருது நீயூஸ் தகவல் அளித்துள்ளது.

சமூகவலைதளங்களில் மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக அதிகமாக தகவல்கள் பரவி வருகிறது. எனினும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும்.

மசூத் அசாரின் நெருங்கி உறவினர்களிடம் இந்த தகவலை உறுதிசெய்துள்ளது அந்த செய்தி நிறுவனம். இதுகுறித்து பாகிஸ்தான் அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது.

இதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமா னப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலை உறுதிப்படுத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, இதில் யாரும் பலியாகவில்லை என்று மறுத்திருந்தது.

இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்துவிட்டான் என உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் நேற்று வெளியாயின. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசார் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது.