பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
New Delhi: சர்வதேச அளவில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில்,
பிரேக்கிங்: ரூபாய் மதிப்பு 73.77ஆக சரிவு. இது உடையவில்லை, உடைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து பிரதமர் எதுவும் கூராமல் இருப்பது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். 56 அங்குளம் மார்பினை கொண்டவர் எவ்வளவு காலம் இந்த அமைதியை தொடருவார் என மறைமுகமாக பிரதமர் மோடியை சாடினார்.
மேலும் அவர் டிவிட்டர் பதிவில், ரூபாயின் மதிப்பு வராலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை ஏற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், மக்கள் பெரும் கோபமடைந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.