This Article is From Jul 05, 2018

விண்வெளிக்கு மனிதனர்களை அனுப்பும் சோதனை முயற்சி- வெற்றி பெற்ற இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் பாட் அபாட் டெஸ்ட் என்ற சோதனை இன்று தொடங்கியது

விண்வெளிக்கு மனிதனர்களை அனுப்பும் சோதனை முயற்சி- வெற்றி பெற்ற இஸ்ரோ
Sriharikota, Andhra Pradesh:

வரும் காலத்தில் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளி வீரர்களாக அனுப்பும் திட்டம் உள்ளதால், முதன்முறையாக விண்வெளிக்கு மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் ஒன்றின் சோதனை ஓட்டத்தை ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவி வெற்றி பெற்றுள்ளது இஸ்ரோ.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்வெளிக்கு மநிதன் செல்லும் போது அவன் பயணிக்கும் விண்கலம் ஏதேனும் பாதிக்கப்பட்டால், அதில் பயணிக்கும் விண்வெளி வீரன் பாதுகாப்பாக தப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையை ஆராய இந்தச் சோதனை ஓட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டது" எனக் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் பாட் அபாட் டெஸ்ட் என்ற சோதனை இன்று தொடங்கியது. விண்கலமானது 2.7 கிமீ தொலைவை அடையும்போது வங்காள விரிகுடா கடலில் விழும் வண்ணம் திருப்பிவிடப்பட்டது. அப்போது விண்கலத்தில் இருந்து விஞ்ஞானிகள் மற்றும் மனிதர்கள் இருக்கும் பகுதி மட்டும் தனியாக பிரிந்து பாராசூட் மூலம் மெதுவாக கீழிறங்கி கடலில் விழுந்தது. இதன் மூலம் சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 

isro escape plan

விண்வெளியில் இருந்து மனிதர்களை பூமிக்கு கொண்டு வர உதவும் கேப்ஸ்யூல் வசதியை இந்தியாவின் இஸ்ரோ சிறப்பாக செய்து முடித்துள்ளது. இதுவரையில், ஒரு விண்வெளி வீரனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சிக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலோ அறிவிப்போ வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கு தற்போதைய சூழலில் 2.5 பில்லியன் வரை செலவு ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் கிடைத்தாலும் இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுபோல் மனிதனை ஏற்றிச்செல்லும் விண்கலம் குறித்தான ஆராய்ச்சியை இதுவரையில் கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். ஏற்கனவே அரசு இதற்காக 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், 17ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

.