This Article is From Dec 24, 2018

ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகளில் புற்றுநோய் வேதிப்பொருளா?

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோய் உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகளில் புற்றுநோய் வேதிப்பொருளா?

100க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஜான்சன் & ஜான்சனின் ஷாம்பூ, ஆயில், சோப் ஆகியவற்றில் எடுக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

New Delhi:

இந்திய மருந்துப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பல குழந்தைகளுக்கான பொருள்களை பறிமுதல் செய்துள்ளது. "இந்தியா முழுவதும் உள்ள மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கூறி, உற்பத்தி தரத்தை சோதனையிட்டனர். அவை நெறிமுறைப்படி தான் தயாரிக்கப்படுகிறதா என்ற சோதனையும் செய்யப்பட்டது.

100க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஜான்சன் & ஜான்சனின் ஷாம்பூ, ஆயில், சோப் ஆகியவற்றில் எடுக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது. அதில் கைப்பற்றப்பட்ட மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

மத்திய மருந்துப்பொருட்கள் ஆய்வகத்தில் எல்லா மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டன. சோதனைக்கு பின் மும்பை மற்றும் ஹிமாச்சலில் உள்ள தொழிற்சாலைகளில் பவுடர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளை அடுத்த அறிவிப்பு வரும் வரை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோய் உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மும்பையில் 200 மெட்ரிக் டன்னும், ஹிமாச்சலில் 82000 கிலோகிராம் பவுடரும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதைத்தான் பயன்படுத்த வேண்டாம் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

இது குறித்து கூறியுள்ள ஜான்சன் & ஜான்சன் நிர்வாகம், "இதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால் எங்கள் நிறுவன பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இல்லை" என்று கூறியுள்ளது.  அவர்களே தனது சொந்த அணியை கொண்டு நாடு முழுவது 100க்கும் அதிகமான இடங்களை சோதனையிடவுள்ளனர்.

நிறுவனத்தரப்பில் இந்தப் பொருள்களை அறிவியல் ரீதியாக இது பாதிப்பற்ற பொருள் என்று நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.