ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

. நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர்.

ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

ஹைலைட்ஸ்

  • ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? கமல்
  • நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர்.
  • ஏழைகள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர்.

ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து அமலில் உள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. தேனி மாவட்டத்தில் 94 மதுக்கடைகள் உள்ளன. அவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு நேற்று முதல் மதுக்கடைகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர். எனினும், மதுக்கடை திறப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த விற்பனையில் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் 5300 கடைகளில் 3850 டாஸ்மாக் கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டிருந்தன. வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 85 முதல் 90 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகும் நிலையில், நேற்று ஒரே நாளில் குறைவான மதுக்கடைகளுடன் மது விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது,

"மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடிக் கட்டிக்காத்ததைக் காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.