இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா இரட்டை குழந்தைக்கு தாயானார்

“இரட்டை பெண் குழந்தைகளுக்கு நிக்ஸ் சக்தி மற்றும் ஆட்டம் தாரா என்று பெயரிட்டுள்ளனர்”

 Share
EMAIL
PRINT
COMMENTS
இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா இரட்டை குழந்தைக்கு தாயானார்

Irom Sharmila: தாய் சேய் மூவரும் நலம்.


Kota, Rajathan: 

இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா ‘அன்னையர் தினத்தன்று இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்தார். மனித உரிமை மற்றும் அரசியல் செயல்பாட்டாளரான இரோம் சர்மிளா பெங்களூருவில் தனியார்
மருத்துவமனையில் இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்தார். 

அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுக்க முடிந்தது.இரண்டு பெண் குழந்தையும் தாயும் நலம் என்று மருத்துவர்கள் பிடிஐ செய்திநிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். “இரட்டை பெண் குழந்தைகளுக்கு நிக்ஸ் சக்தி மற்றும் ஆட்டம் தாரா என்று பெயரிட்டுள்ளனர்”

0g6vn4b4

44 வயதான இரோம் சர்மிளா “மணிப்பூரின் இரும்புப் பெண்மணி” என்றுஅழைக்கப்படுகிறார். 2000ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் சிறப்பு அதிகாரம்ஆயுதப்படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். 16 ஆண்டுகள் கழித்து ஆகஸ்டு 9, 2016 ஆம் ஆண்டு போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வந்தார்.

உலகிலேயே நீண்ட கால உண்ணாவிரத போராட்டமாக இது பார்க்கப்படுகிறது. மணிப்பூரின் முதலமைச்சராக
ஆகப்போவதே தன் விருப்பம் என்று அறிவித்த இரோம் சர்மிளா. தன்னுடைய புதிய கட்சியையும் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 90 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் மன அமைதிக்காக தென்னிந்தியாவிற்கு வந்தார். 

c6rf5c7s

2017 ஆம் ஆண்டு நீண்ட கால துணையாக இருந்த டேஸ்மண்ட் கொடின்கோ என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................