This Article is From May 28, 2020

உயிருடன் புதைக்கப்பட்ட ஆண்குழந்தை; அழுகுரல் கேட்டு மீட்ட கிராமத்தினர்!!

உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை கிராமத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

உயிருடன் புதைக்கப்பட்ட ஆண்குழந்தை; அழுகுரல் கேட்டு மீட்ட கிராமத்தினர்!!

உயிருடன் புதைக்கப்பட்ட ஆண்குழந்தை; அழுகுரல் கேட்டு மீட்ட கிராமத்தினர்!!

Lucknow:

உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிலர் மயக்க நிலையில் குழந்தையின் அழுகுரலை கேட்டுள்ளனர். 

இதையடுத்து, விரைந்த  கிராமத்தினர் அந்த குரல் எந்த திசையில் இருந்து கேட்கிறது என்பதை தேடிச்சென்றுள்ளனர். சில விநாடிகளில் கட்டுமான பணி நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் அருகில் குழந்தை சத்தம் கேட்டுள்ளது. 

அங்கிருந்த மண் மற்றும் மணல் மேடுகளில் பார்த்த போது, பிறந்த குழந்தையின் கால் மட்டும் வெளியே தெரிந்துள்ளது. 

உடனடியாக மண்ணை தோண்டி, அதன் உள்ளே இருந்து பிறந்த ஆண்குழந்தையை அவர்கள் மீட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தின் சோனாரா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையை கிராமத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். தொடர்ந்து, அங்கு மருத்துவர்கள் குழந்தையின் மீதிருந்த மணல் மற்றும் சேற்றை அப்புறப்படுத்தி ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சோதித்துள்ளனர். 

இதன்பின்னர், குழந்தை உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆனால், மண்ணை முழுங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உத்தர பிரதேசம் தலைநகர் லக்னோவில் இருந்து 260 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

.