This Article is From Aug 29, 2019

ப.சிதம்பரம் (P Chidambaram) கைதானது நல்ல செய்திதான்: இந்திராணி முகர்ஜி

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.

ப.சிதம்பரம் (P Chidambaram) கைதானது நல்ல செய்திதான்: இந்திராணி முகர்ஜி

தற்போது, சிபிஐ-யின் கஸ்டடியில் இருக்கிறார் சிதம்பரம். அவரை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறையும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • ஐ.என்.எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளார் இந்திராணி
  • கடந்த ஒரு வாரமாக சிபிஐ பிடியில் இருக்கிறார் சிதம்பரம்
  • ஷீனா போரா வழக்கில் 2015 முதல் சிறையில் இருக்கிறார் இந்திராணி
Mumbai:

சிறையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியாவின் நிறுவனர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்திதான் என்று கூறியுள்ளார். 

இந்திராணி முகர்ஜி, தனது மகளான ஷீனா போராவைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் வழக்கில் அவர் அப்ரூவராக மாறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவின் தலைவர்களாக இருந்தவர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவரான பீட்டர் முகர்ஜி. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாகா பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டித்தான், ப.சிதம்பரத்துக்கு எதிராக அரசு தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டதாம். அதைத் தொடர்ந்துதான் சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்திராணி முகர்ஜி, ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பீட்டர் முகர்ஜியும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திராணி, விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் அப்ரூவராக மாறியுள்ளார். 

இப்படிபட்ட சமயத்தில்தான் இந்திராணி முகர்ஜி, மும்பை நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம், “ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்திதான்” என்று கூறியுள்ளார். 

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டார். தற்போது, சிபிஐ-யின் கஸ்டடியில் இருக்கிறார் சிதம்பரம். அவரை கைது செய்து விசாரிக்க அமலாக்கத் துறையும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. 

(ANI தகவல்களுடன்)

.