This Article is From Jul 29, 2019

விளையாட்டு வினையானது : ஏர் கம்ப்ரஸரை வைத்து வயிற்றுக்குள் காற்றடித்த சிறுவர்கள்

சிறுவனின் வயிறு வீங்கியிருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். சிறுவர்கள் தொழிற்சாலையில் உள்ள ஏர் கம்ப்ரசரை வைத்து காற்று அடித்துள்ளனர் என்று கூறியுள்ளார். 

விளையாட்டு வினையானது : ஏர் கம்ப்ரஸரை வைத்து  வயிற்றுக்குள் காற்றடித்த சிறுவர்கள்

சிறுவனின் நண்பர்கள் ஏர் பிரஸரை சிறுவனின் வாயில் வைத்து காற்று அடித்துள்ளனர் (Representational)

Indore:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்  6வயது சிறுவனொருவன் வாயில் ஏர் கம்ப்ரஸரை வைத்து காற்றடித்ததில் இறந்து விட்டான். இறந்த சிறுவனின் நண்பர்கள் விளையாட்டாக செய்ததில் சிறுவன் பலியாகி விட்டான். 

இறந்த சிறுவனின் தந்தை பால்டா தொழில்துறை பகுதியில் பணிபுரிகிறார். அங்கு தன் குடும்பத்தினருடன் வளாகத்தில் வசித்து வருகிறார்.  சிறுவனின் நண்பர்கள் ஏர் பிரஸரை சிறுவனின் வாயில் வைத்து காற்று அடித்துள்ளனர் என்று சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். 

காற்றடிக்கப்பட்ட சிறுவன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை வைத்து சரியான காரணம் தெரிய வரும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.  

சிறுவனின் தந்தை ராம்சந்திர யாதவ் தனது மகனின் இரண்டு நண்பர்கள்தான் தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறினார். சிறுவனின் வயிறு வீங்கியிருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். சிறுவர்கள் தொழிற்சாலையில் உள்ள ஏர் கம்ப்ரசரை வைத்து காற்று அடித்துள்ளனர் என்று கூறியுள்ளார். 

.