This Article is From Nov 01, 2018

189 பேரை பலிவாங்கிய இந்தோனேசிய விமான விபத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் விபத்து நேர்ந்ததற்கான உண்மையான காரணம் என்னவென்று விரைவில் தெரியவரும்

189 பேரை பலிவாங்கிய இந்தோனேசிய விமான விபத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

விமானதின் சிதறிய பாகங்கள் ஜகார்த்தா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Lion Air jet crashed into the sea this week with 189 aboard in Indonesia
  • The black box has been found from among debris in mud on the sea floor
  • The black box is orange in colour and intact, a diver says
Jakarta:

இந்தோனேசியாவில் 189 பேரை பலி வாங்கிய விமான விபத்தில் விமானத்துடைய கருப்பு பெட்டியை அந்நாட்டின் ஆழ்கடல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த திங்களான்று ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் நகரை நோக்கி  சென்ற போயிங் விமானம், புறப்பட்ட 13 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விடுபட்டது.

இதையடுத்து கடல்பரப்பு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 189 பேரில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால்தான் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்ற அடிப்படையில், அதனை கண்டுபிடிக்கும் பணியில் இந்தோனேசியாவின் ஆழ்கடல் வீரர்கள் ஈடுபட்டனர்.

2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.

விமானியில் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பெட்டி, அங்கு நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில் விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படலாம்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.