This Article is From Feb 26, 2019

90 செகன்ட்டில் 300 தீவிரவாதிகளை அழித்தது எப்படி? – ஸ்கெட்ச் போட்டது யார்?

தாக்குதல் நடந்த அதிகாலை 3.30 மணிக்கு, அதனை பிரதமர் மோடி கண்காணித்திருக்கிறார். ராணுவத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மிகவும் சீக்ரெட்டாக இந்த ஆப்பரேஷனை இந்திய விமானப்படை நடத்தி முடித்துள்ளது

90 செகன்ட்டில் 300 தீவிரவாதிகளை அழித்தது எப்படி? – ஸ்கெட்ச் போட்டது யார்?

லேசர் தொழில் நுட்பம் மூலம் மிகத் துல்லியமாக வெடிகுண்டுகள் தீவிரவாதிகள் மீது வீசப்பட்டுள்ளது.

New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து 90 செகன்ட்டில் 300 தீவிரவாதிகளை இந்திய விமானப்படை அழித்துள்ளது. எப்படி இந்த ‘ஆப்பரேஷன் பாலகோட்' நடந்தது குறித்து புதிய தகவல்கள் வெளி வரத் தொடங்கியுள்ளன. 

ஒட்டுமொத்த ஆப்பரேஷனும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் தலைமையில்தான் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்த அதிகாலை 3.30-க்கு பிரதமர் நரேந்திர மோடி அதனை கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டதும், அதற்கு அடுத்து எழுந்த அழுத்தங்களும், மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தன. 

இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், அது திடீர் அட்டாக்காக இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய ஆலோசனையில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த கூட்டத்தில் ‘பாலகோட் ஆப்பரேஷன்' குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. 

இந்த கூட்டத்தில் புல்வாமா தாக்குதலுக்கு தரமான பதிலடியை நாம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை கூறியுள்ளார். 

இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள தீவிரவாத குழுக்கள் குறித்த விவரங்களை, இந்திய உளவுத்துறை சேகரித்து வைத்திருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ஸ்கெட்ச் போடப்பட்டு மிக மிக ரகசியமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இதன் அடிப்படையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு விமானப்படையின் மிராஜ் 2000- போர் விமானங்கள் ஜெய்ஷ் இ முகமதுவின் பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்துள்ளன. லேசர் தொழில்நுட்பத்தின் உதவியால், ஒரு குண்டு கூட வீணாகாமல் மொத்தம் 1000 கிலோ வெடிகுண்டுகள் நச்சென்று தீவிரவாத முகாம்கள் மீது இறக்கப்பட்டன. 

b8v95u58

 

இதில் குறைந்தது 300 தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். புல்வாமாவுக்கு பதிலடியாக இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதலை நடத்தும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

ஆனால் இந்த அட்டாக் அவர்களுக்கு சர்ப்ரைசாகவும், கடும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்து விட்டது. 
பாலகோட் தீவிரவாத முகாமில் 500-700 பேர் வரை தங்க முடியும். தாக்குதல் நடந்த அதே நேரத்தில், பாகிஸ்தான் அதிகாரிகளை குழப்புவதற்காக பல்வேறு விமான தளத்தில் இருந்து, விமானங்ளை இந்திய விமானப்படை இயக்கியது. 

ஒட்டு மொத்தத்தில் பிசிறின்றி ‘பாலகோட் ஆப்பரேஷனை' பர்ஃபெக்டாக முடித்திருக்கிறது இந்திய விமானப்படை.

 

மேலும் படிக்க : பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி முகாமின் புகைப்படங்கள் வெளியானது!

.