This Article is From Nov 18, 2018

அடுத்த ஆர்டர் : ரூ.14 ஆயிரம் கோடிக்கு ‘ரோமியோ’ ஹெலிகாப்டரை வாங்கும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து ரூ. 14 கோடி செலவில் 24 ‘ரோமியோ’ ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது

அடுத்த ஆர்டர் : ரூ.14 ஆயிரம் கோடிக்கு ‘ரோமியோ’ ஹெலிகாப்டரை வாங்கும் இந்தியா

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை எதிர்கொள்ளும் ‘ரோமியோ’ ஹெலிகாப்டர்கள்

Washington:

அமெரிக்காவிடம் இருந்து ரூ. 14 கோடி செலவில் 24 ‘ரோமியோ' ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நீர் மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை சமாளிக்கும் வகையில் ‘ரோமியோ' வகை ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகை ஹெலிகாப்டர்கள் மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அவசியம் தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரோமியோ ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தங்களுக்கு உடனடியாக ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் இருந்து அமெரிக்காவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சிலமாதங்களில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் உள்ள நெருக்கம் அதிகரித்துள்ளது.

.