This Article is From Sep 06, 2018

‘ககன்யான்’ திட்டத்துக்காக ஃபிரான்ஸுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது இஸ்ரோ

இருநாட்டு விஞ்ஞானிகளும் இணைந்து ககன்யான் திட்டத்துக்காக பணியாற்ற உள்ளனர்

‘ககன்யான்’ திட்டத்துக்காக ஃபிரான்ஸுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது இஸ்ரோ
Bengaluru:

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளை இணைத்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளது இஸ்ரோ. இருநாட்டு விஞ்ஞானிகளும் இணைந்து ககன்யான் திட்டத்துக்காக பணியாற்ற உள்ளனர்.

இந்த அறிவிப்பை பெங்களூருவில் நடந்த ஸ்பேஸ் எக்ஸ்போவின் ஆறாவது எடிஷனில் ஃபிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ஜீன் வெஸ் லீ கல் வெளியிட்டார்.

2022-ம் ஆண்டுக்குள் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

இஸ்ரோ மற்றும் சிஎன்இஸ் என்ற ஃபிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளும் இணைந்து, விண்வெளி மருத்துவம், ஆஸ்ட்ரோநாட்களின் உடல் நிலையை கண்காணிப்பது, உயிர் காக்கும் தொழிநுட்பம், கதிர்வீச்சில் இருந்து காத்தல், விண் கற்களில் இருந்து தடுப்பு, தனி நபர் சுகாதாரம் ஆகிய வற்றில் பணியாற்ற உள்ளனர்.

இன்ஜினியர்கள் தங்கள் பணியை தொடங்கிவிட்டதாகவும், மைக்ரோ கிராவிட்டியில் பயிற்சி மற்றும் சோதனை செய்ய CADMOS என்ற மையத்தையும், விண்வெளியில் மருத்துவமனையின் மாதிரியாக இருக்கும் MEDES என்ற விண்வெளி கிளினிக்கையும் பயன்படுத்த இருப்பதாக லீ கல் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாடுகளும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியிலும், ஈடுபடும் திட்டத்தில் இருக்கின்றன.

.