This Article is From Dec 16, 2018

ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்

காங்கிரசின் கோட்டையான ரேபரேலிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்

Raebareli:

ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையினை பார்வையிட்ட பிரதமர் மோடி, பின்னர் மேடையில் பேசும்போது, நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதாக கடுமையாக குற்றம்சாட்டினார்.

ரஃபேல் போர் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, வெளிப்படைத்தன்மையாக இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியது காங்கிரஸ் கட்சியை வெறுப்படையச் செய்திருக்கிறது.

தேசத்துக்கு எதிராகச் செயல்படும் நாடுகளில் இருந்து காங்கிரஸ் கட்சி ஆதரவைக் கோருவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம்நாட்டுத் தலைவர்கள் சிலர் பேசும் பேச்சுக்கு பாகிஸ்தான் கைதட்டி வரவேற்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

கார்கில் போருக்கு பின்னர் நம் நாட்டு விமானப்படையை அதி நவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைத்தும், பத்தாண்டுகளாக அட்சியில் இருந்த காங்கிரஸ் இது குறித்து எந்தவித நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.

நாட்டின் ராணுவத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுகிறது. ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவது, இந்திய ராணுவத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

.