This Article is From Nov 24, 2018

மகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் 235 விவசாயிகள் தற்கொலை

கடந்த ஜனவரி 2001-ல் இருந்து அக்டோபர் 2018 வரைக்கும் மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

மகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் 235 விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிர சட்டசபையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 235 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அம்மாநில நிவாரண மற்றும் மீட்புத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் அளித்துள்ள தகவலில், “ விதர்பா பிராந்தியத்தில் வரும் 6 மாவட்டங்களில் கடந்த ஜனவரி 2001-ல் இருந்து 2018 அக்டோபர் வரையில் 15,629 விவசாயிக்ள உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 7008 பேருக்கு நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தற்கொலை செய்யப்பட்ட விவசாயிகள் தொடர்பாக 215 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாசிக் மாவட்டடத்தில் கடந்த 18 ஆண்டுகளில் 73 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 235 விவசாயிகள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி குறித்து வரையறை ஏதும் இல்லை.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உணவு பாதுகாப்பு திட்டம், சுகாதார உதவி, கல்வி உதவி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

.