விமானப்படை விமானம் மீது பறவை மோதியதில் எஞ்சின் கோளாறு.. பத்திரமாக தரையிரங்கிய விமானி!

இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மீது பறவை ஒன்று மோதியதால் அதன் ஒரு இஞ்சின் செயலிழந்து அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

விமானப்படை விமானம் மீது பறவை மோதியதில் எஞ்சின் கோளாறு.. பத்திரமாக தரையிரங்கிய விமானி!

இந்திய விமானப்படை சுமார் 100 ஜாகுவார் போர் விமானங்களைக் கொண்டுள்ளது,

Ambala, Haryana:

ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானத்தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறும்போது, விமானத்தின் ஒரு இஞ்சின் செயலிழந்ததை தொடர்ந்து, உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி, அம்பலா விமானப்படை தளத்தில் விமானத்தை பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

இதில் அவசர நடவடிக்கையாக, விமானத்தின் பாரத்தை குறைக்கும் வகையில், விமானத்தின் எரிபொருள் தொட்டி மற்றும் சிறிய அளவிலான பயிற்சி குண்டுகளையும் கீழே வீச வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், பால்தேவ் நகரில் உள்ள விமானப்படை தளத்தின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை விமானம் கடக்கும் போது நிகழ்ந்துள்ளது. இதில், விமானத்தின் ஒரு சில பொருட்கள் வீட்டின் மேற்கூரையின் மீதும், ஒரு சில பொருட்கள் சாலையிலும் விழுந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு ஆம்புலான்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மூத்த விமானப்படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் வேறு ஏதேனும் வெடிகுண்டுகள் விழுந்துள்ளதா என்பது குறித்து சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜகுவார் ரக, பயிற்சி விமானத்தின் மீது பறவை மோதியதால் ஒரு எஞ்சின் செயலிழந்தது. மீதமுள்ள ஒரு எஞ்சினின் மூலம் விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இதேபோல், கடந்த ஜனவரி மாதம் உத்தர பிரதேசத்தில் ஜாகுவார் ரக விமானப்படை விமானம் விபத்தை சந்தித்த போது, அதில் இருந்து விமானி ரோகித் பத்திரமாக தரையிரங்கினார்.

இந்திய விமானப்படை சுமார் 100 ஜாகுவார் போர் விமானங்களைக் கொண்டுள்ளது, அவை 1970களின் பிற்பகுதியில் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். தொடர்ந்து, தொலைத்தூர தாக்குதல் திறனைக் கொண்டுள்ள போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டங்களை இந்திய விமானப்படை கொண்டுள்ளது.

With inputs from ANI