அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கிய ரஃபேல் போர் விமானங்கள்!

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்த விமானங்கள் இந்தியாவின் விமான படையின் பலத்தினை பெருமளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கிய ரஃபேல் போர் விமானங்கள்!

அம்பாலா விமான தளத்தில் இன்று ரஃபேல் போர் விமானம் தரையிறங்கியது.

Ambala:

சுமார் 7 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து இந்தியாவின் எல்லைக்கு நுழைந்த 5 ரஃபேல் போர் விமானங்கள். ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கின. இந்த வீடியோவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

27 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் சக்தி வாய்ந்த இன்ஜின் சப்தத்தின் பின்னணியில் ரஃபேல் விமானம் தரையிறங்குகின்றது. தரையிறங்கும் போது புகைகள் மேலெழுகின்றன.

இந்த ஜெட் விமானங்கள் தென்மேற்கு பிரான்சில் உள்ள மெரிக்னாக்கிலிருந்து புறப்பட்டு வழியில் நடுப்பகுதியில் வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டு இன்று இந்தியாவில் தரையிறங்கின.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்த விமானங்கள் இந்தியாவின் விமான படையின் பலத்தினை பெருமளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.