நமாஸுக்கு மசூதி அவசியமா..?- உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Ayodhya : முஸ்லீம்களுக்கு நமாஸ் செய்ய மசூதி அவசியமா என்பது குறித்தான வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்

Ayodhya Verdict: தீர்ப்பு வெளியாகுவதால் உ.பி.யில் பரபரப்பு காணப்படுகிறது

New Delhi:

முஸ்லீம்களுக்கு நமாஸ் செய்ய மசூதி அவசியமா என்பது குறித்தான வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான வழக்கில் கடந்த 1994 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், நமாஸ் செய்ய முஸ்லீம்களுக்கு மசூதி அவசியம் இல்லை. நமாஸ் என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனவே, மசூதி இருக்கும் ஓர் இடத்தை அரசு தேவைப்பட்டால் கையகப்படுத்தலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இந்த வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

1994 தீர்ப்புக்கு முஸ்லீம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது தங்களுக்கு எதிரானது என்றும் ஆயோத்யா தொடர்பான வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன முஸ்லீம் கட்சிகள். 

1992 ஆம் ஆண்டு, ஆயோத்யாவில் இருக்கும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, வலதுசாரி அமைப்பினர் இடித்தனர். அதற்கு அவர்கள், மசூதி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார், எனவே அங்கு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் 2010-ல், மசூதி இருந்த இடத்தை 3 பகுதிகளாக பிரித்தது. அதில் ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் இன்னொரு பகுதியை இந்துகளுக்கும் கொடுத்தது நீதிமன்றம். இதில் நிலத்தின் முக்கியப் பகுதி இந்துகளுக்குத்தான் கொடுக்கப்பட்டது. 

அலாகாபாத் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக, இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ‘முஸ்லீம்களுக்கு நமாஸ் செய்ய மசூதி அவசியமா?’ என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவிக்கப் போகும் தீர்ப்பு, அயோத்யா வழக்கில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com