This Article is From Nov 08, 2018

வேலையை முடிக்காவிட்டால் சிறுநீர் அருந்தவேண்டும்...சீனாவில் ஒரு கொடுமை

ஊழியர்களை இப்படி கடுமையாக தண்டிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

வேலையை முடிக்காவிட்டால் சிறுநீர் அருந்தவேண்டும்...சீனாவில் ஒரு கொடுமை

ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலையைச் செய்ய தவறினால் சிறுநீர் குடிக்க வேண்டும், கரப்பான் பூச்சி உண்ண வேண்டும். (Representational)

Beijing:

சீனாவில் இருக்கும் வீடு பராமரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலையைச் செய்ய தவறினால் சிறுநீர் குடிக்க வேண்டும், கரப்பான் பூச்சி உண்ண வேண்டும் இல்லையென்றால் பெல்ட் அடி என்ற பல நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது.

மற்றவர்கள் தங்களின் தலைமுடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டும், டாய்லெட்டில் இருக்கும் தண்ணீர் குடிக்க வேண்டும், அவர்களிம் ஒரு மாத சம்பளம் பிடிக்கப்படும் போன்ற கட்டுபாடுகள் இருப்பதாக சீனாவில் ஒரு ஊடகச் செய்தியில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தண்டனைகள் மற்ற ஊழியர்களுக்கு முன்னிலையில் நடைபெறும். இதனால், அந்த ஊரில் இருக்கும் ஊழியர்கள் பலரும் வேலையை விட்டு சென்றுள்ளனர், என்று செய்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருவேளை ஊழியர்கள் லெதர் ஷூ அணியவில்லை என்றாலோ, பணிக்கு வரும்போது நேர்த்தியான உடையில் வரவில்லை என்றாலோ 50 யுவான்(7.50 டாலர்) அபராதம் போடப்படுகிறது. இப்படி இருந்தும் பல ஊழியர்கள் இங்கிருந்து வேலை பார்க்கிறார்கள்.

ஊழியர்களை இழிவாக நடத்தியதால், அந்த நிறுவனத்தின் மூன்று மேனேஜர்கள் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஊழியர்களை இப்படி கடுமையாக தண்டிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஊழியர்களை அதிக நேரம் வேலை பார்க்க விட்டு, ஊதியமும் குறைத்து கொடுப்பது குறித்தும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஒரு சிலர் வெளியில் சொன்னாலும், மற்றும் சிலர் அதை அவர்களின் விதியென்று கருதிக் கொண்டு அங்கு வேலை செய்கிறார்கள்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.