This Article is From Feb 27, 2019

சர்ச்சை பதிலால், நெட்டிசன்களிடம் சிக்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

பாகிஸ்தான் விமானப்படை ஏற்கனவே விமானத் தொடர்பில் தான் இருந்தது. நாங்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக இருந்தோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்

சர்ச்சை பதிலால், நெட்டிசன்களிடம் சிக்கிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

நாள் முழுவதும் ஷா முகமது குரேஷி சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • பர்வேஸ் காதக் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
  • பாகிஸ்தான் விமானப்படையால் சேதத்தின் அளவை அளவிட முடியவில்லை என்றார்.
  • பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தது.
New Delhi:

காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் காதக், பாகிஸ்தான் விமானப் படைகள் தயாராக இருந்ததாகவும், இருள் சூழ்ந்து இருந்ததால் பதிலடி கொடுக்க முடியவில்லை என்றார்.

பாலகோட் பகுதிகளில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ''மிராஜ்-2000'' ரகத்தை சேர்ந்த 12 போர் விமானங்கள், சுமார் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி நடத்திய அதிரடி தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லேசர் ரக குண்டுகளை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 200 முதல் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி வெளியுறவுத் துறை அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பிரதமர் இம்ரான்கான் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் காதக், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் விமானப்படை குறித்து விவரித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் பர்வேஸ் காதக், பாகிஸ்தான் விமானப்படைகள் தயாராக இருந்ததாகவும், இருள் சூழ்ந்து இருந்ததால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால், அவர்களால் சேதத்தின் அளவை அளவிட முடியவில்லை. இதற்காக அவர்கள் காத்திருந்தனர் தற்போது அவர்கள் தெளிவான பாதையை வகுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

 

 

 

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் காதக் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதில் இருந்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது மேலும் அவர் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

எனினும் இதனிடையே பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் ஷா முகமது குரேஷி, பாகிஸ்தான் விமானப்படை தயாராக உள்ளது என்றும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.