This Article is From Sep 25, 2018

‘ஐ லவ் இந்தியா!’- சுஷ்மாவிடம் பொங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா பொதுச் சபை கூட்டம் நடந்து வருகிறது

‘ஐ லவ் இந்தியா!’- சுஷ்மாவிடம் பொங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சென்ற ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்ற போது, அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்

ஹைலைட்ஸ்

  • ஐ.நா கூட்டத்தின் போது சுஷ்மா, ட்ரம்பை சந்தித்துள்ளார்
  • நிக்கி ஹேலி தான், சுஷ்மாவை ட்ரம்பிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்
  • கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர்
United Nations:

அமெரிக்காவின் நியூயார்க்கில், ஐ.நா பொதுச் சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பல்வேறு கூட்டங்களில் கலந்து வருகிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ். அவர் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து உரையாடியுள்ளார். 

போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக நடந்த ஒரு கூட்டத்திற்கு ட்ரம்ப் தலைமை வகித்துள்ளார். அவர் தனது கருத்தை கூறிய பின்னர் மேடையிலிருந்து இறங்கி நடந்து வந்தார். அப்போது ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, சுஷ்மாவை கட்டியணைத்து வரவேற்றார். ட்ரம்பிடமும் சுஷ்மாவை அறிமுகப்படுத்தி வைத்தார் ஹேலி. 

அப்போது சுஷ்மா, ‘பிரதமர் மோடி உங்களிடம் நலம் விசாரிக்கச் சொன்னார்’ என்று கூறியதற்கு ட்ரம்ப், ‘எனக்கு இந்தியாவை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் இந்தியா. பிரதமர் மோடியையும் விசாரித்ததாகச் சொல்லுங்கள்’ என்று பதிலளித்தார். 

சென்ற ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சென்ற போது, அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். அப்போது வெள்ளை மாளிகை தரப்பு, ‘அதிபர் ட்ரம்ப், வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு வெள்ளை மாளிகையில் முதன் முதலாக விருந்து கொடுப்பது இப்போது தான்’ என்று கூறியது. 

பிரதமர் மோடியும், ‘2014 ஆம் ஆண்டு ட்ரம்ப், இந்தியாவுக்கு வந்த போது, என்னைப் பற்றி பல நெகிழ்ச்சியான விஷயங்களை சொன்னார். அது இன்னும் என் நினைவில் இருக்கிறது’ என்று நெகிழ்ந்தார். 

பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியன் மாநாட்டில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

.