This Article is From Nov 12, 2019

ஹைதராபாத் ரயில் விபத்து : எப்படி நடந்தது? வெளியானது வீடியோ காட்சிகள்

ரயில்வே அமைச்சகம் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5,000 மற்றும் கடுமையான காயமைடைந்தவர்களுக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் தென் மத்திய ரயில்வே, 20 ரயில்களை ரத்து செய்தது.

சுமார் 8 மணி நேரம் மீட்பு பணி போராட்டத்துக்குபின்னர் ஓட்டுநர் சந்திர சேகர் மீட்கப்பட்டார்.

Hyderabad:

ஹைதராபாத்தின் கச்சிகுடா ரயில் நிலையம் அருகே இரண்டு ரயில்கள் மோதியது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியானது. 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் குர்னூல் - செகுந்தராபாத் இண்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 10.30 மணிக்கு பிளாட்பாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிரே அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளிலிருந்து மீட்க டன் கணக்கில்  ரயிலை வெட்ட வேண்டியிருந்தது. புறநகர் ரயிலின் ஓட்டுநர் என்ஜினில் சிக்கினார். சுமார் 8 மணி நேரம் மீட்பு பணி போராட்டத்துக்குபின்னர் ஓட்டுநர் சந்திர சேகர் மீட்கப்பட்டார்.

சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கொடுக்கும் முன்னரே, மின்சார ரயில், நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளதாகவும், தண்டவாளம் மாற்றப்படாததால் விபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

 ரயில்வே அமைச்சகம் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 5,000 மற்றும் கடுமையான காயமைடைந்தவர்களுக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் தென் மத்திய ரயில்வே, 20 ரயில்களை ரத்து செய்தது. 

.