This Article is From Dec 24, 2018

உயரமான மலைகளில் ஏறி சாதனை படைக்கும் ஐதராபாத் சிறுவன்!

இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மலையில் ஏறும் போது அவர்கள் தெலுங்கானாவில் தயார் செய்யப்பட்ட கைத்தறி அடைகளை அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது

உயரமான மலைகளில் ஏறி சாதனை படைக்கும் ஐதராபாத் சிறுவன்!
Hyderabad:

ஐதராபாத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் சாமன்யூ பொத்துராஜு தனது தாய் மற்றும் சகோதரியுடன் ஆஸ்திரேலியாவின் 2,228 அடி உயரம் உள்ள கோஸ்சியஸ்கோ மலையை ஏறி சாதனை படைத்துள்ளான்.

ஏற்கனவே, இந்த வருடம் தென் ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமன்ஜாரோவில் ஏறி அச்சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5,895 அடி உயரத்தில் இருக்கும் தான்சானியாவின் கிளிமன்ஜாரோ மலை உச்சியில் நமது தேசிய கொடியை நட்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான்.

இதுகுறித்து சாதனை சிறுவன் சாமன்யூ கூறும்போது, 'நான் இதுவரை நான்கு மலைகளை ஏறி உள்ளேன், அடுத்ததாக ஜப்பானில் உள்ள மவுண்ட் புஜி மலையில் ஏற விரும்புகிறேன். எதிர்காலத்தில் விமானப் படை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது விருப்பம் என சிறுவன் தெரிவித்துள்ளான்.

'நாங்கள் ஒவ்வொரு முறையும் மலை மீது ஏறும் போதும் ஏதாவது நோக்கத்தோடு ஏறுவோம். இம்முறை தெலுங்கானா கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஏறினோம்' என சாமன்யூவின் தாய் லாவண்யா கூறினார்.

இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மலையில் ஏறும் போது அவர்கள் தெலுங்கானாவில் தயார் செய்யப்பட்ட கைத்தறி ஆடைகளை அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

.