This Article is From Jun 10, 2019

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 5 மாநில கவர்னர்கள் சந்திப்பு!!

உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்பட்ட முக்கிய சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 5 மாநில கவர்னர்கள் சந்திப்பு!!

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

New Delhi:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 5 மாநில  கவர்னர்கள் முக்கிய சந்திப்பை நடத்தினர். அப்போது மாநில பிரச்னைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்த பின்னர், உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 5 மாநில கவர்னர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

மேற்கு வங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி, தமிழக  கவர்னர்  பன்வாரிலால் புரோகித், தெலங்கானா கவர்னர் நரசிம்மன், ஜாக்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு, அருணாசல  பிரதேச  கவர்னர் பிடி மிஸ்ரா ஆகியோர் அமித் ஷாவை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

இந்த சந்திப்பின்போது மாநில பிரச்னைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் நடத்தப்பட்ட முக்கிய சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

.