This Article is From Jun 28, 2018

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் உதவி பணியாளர்களை நியமிக்க நீதிமன்றம் தடை

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் உதவி பணியாளர்களை நியமிக்க நீதிமன்றம் தடை

சென்னை, ஜூன் 28 (பிடிஐ) புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்தித்துள்ளது. வெளிப்படையான முறையில் எஸ்.சி பிரிவினருக்கான இடங்கள் நிரப்பப்படும் வரை தின ஊதியம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி கட்டப்படுவதற்கு நிலங்கள் பெறப்பட்டன. நில உரிமையாளர்களுக்கு மாற்று வேலை அளிக்கும் வகையில், புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக அரச உறுதியளித்திருந்தது.நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட 132 பேருக்கு கல்லூரியில் தற்காலிகமாக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. பின்னர், வேலை நிரந்தரமாக்கப்பட்டது

கடந்த 2005 ஆம் ஆண்டு எஸ்.சி பிரிவில் 17 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மேற்கொண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல், 23 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.வேல்முருகன், ஜி.வேலுசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் வேலைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

முதலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட முறையை அகற்றாம்மல், மனு அளித்த இரண்டு நபர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க கோரி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி புதுச்சேரி அரசு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கே.கே சசிதரன் மற்றும் ஆர்.சுப்ரமணியன், தனி நீதிபதி அளித்த உத்தரவு தவறானது எனக் கூறியுள்ளனர். மனு அளிக்க வந்தவர்களை தேர்வு முறை இல்லாமல் பணியில் நியமிக்க முடியாது என்றும் அந்த அமர்வு கூறியது. வேண்டுமானால், வயது வரம்பை தளர்த்தி பணியிடங்களுக்கான அறிவிப்பு அரசு வெளியிடலாம் என்றும், மனுதாரர்கள் விதிமுறைகளின் படி விண்ணப்பிக்கலாம் என்று நீதிமன்ற அமர்வு கூறியது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.