This Article is From Nov 14, 2018

ராஜஸ்தான் தேர்தல்: பாஜக முக்கியப் புள்ளி காங்கிரஸில் இணைந்தார்..!

ராஜஸ்தான் மாநில டிஜிபி-யாக 2009 முதல் 2013 வரை செயல்பட்டவர் ஹரிஷ் மீனா

ராஜஸ்தான் தேர்தல்: பாஜக முக்கியப் புள்ளி காங்கிரஸில் இணைந்தார்..!

64 வயாதாகும் எம்.பி ஹரிஷ் மீனா, 2014 ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்

Jaipur:

ராஜஸ்தான் மாநில பாஜக-வின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரிஷ் மீனா, காங்கிரஸில் இணைந்துள்ளார். மாநிலத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாஜக-வுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

64 வயாதாகும் எம்.பி ஹரிஷ் மீனா, 2014 ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார். அவர் முன்னாள் டிஜிபி ஆவார். மீனாவின் சகோதரரான நமோ நாராயண மீனா, காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தானைப் பொறுத்தவரை மீனா சமூகத்தினர், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கிழக்கு ராஜஸ்தானில் அவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ராஜஸ்தானில் அரசியல் களத்திலும், அரசு துறைகளிலும் மீனா சமூகத்தினர் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் மாநில டிஜிபி-யாக 2009 முதல் 2013 வரை செயல்பட்டவர் ஹரிஷ் மீனா. நாட்டிலேயே டிஜிபி-யாக இவ்வளவு காலம் செயல்பட்டவர்கள் யாரும் இல்லை.

.