This Article is From Sep 04, 2020

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்பஜன்சிங்!

எதிர்வரும் 13 வது தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்பஜன்சிங்!

சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங் நடப்பு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறியப்படுகின்றது

ஐபிஎல் தொடரிலிருந்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வெளியேறுவதாக தற்போது கூறியிருப்பது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியிலிருந்து சி.எஸ்.கே அணியிலிருந்து சுரேஷ் ரெய்னா சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் தற்போது ஹர்பஜன்சிங் தனது சொந்த காரணத்தினால் ஐபிஎல் விளையாட்டிலிருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களைத் தவிர்த்து பிறர் எவரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திக்கப்பட்ட இரண்டு வீரர்களும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த பின்னர் COVID-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சி.எஸ்.கே தவிர மற்ற அனைத்து அணிகளும் ஐ.பி.எல்லின் 13 வது தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 21 அன்று நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்திருந்தனர்.

எதிர்வரும் 13 வது தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

.