3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து மீட்பு!

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர்.

ஹைலைட்ஸ்

  • 3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து மீட்பு!
  • சென்னை விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை
  • இந்தியா திரும்பி வருவதற்கு 2,00,000 பேர் விண்ணப்பம்

2 ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து 350 இந்தியர்கள் நேற்றிரவு மீட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் மூலம் 3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதனை வெளியரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவிலும் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து, மீட்டு அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் அரசின் இலவச தனிமைப்படுத்தல் மையத்திலும் இருக்கலாம் அல்லது பணம் கொடுத்து விடுதிகளிலும் தங்கிக்கொள்ளலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரக இணையதளத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகவும், இது அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதமாகும் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், இந்தியா திரும்பி வருவதற்கு 6,500 கர்ப்பிணி பெண்கள் உட்பட 2,00,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

Newsbeep

ஊரடங்கு காரணமாக இந்தியா திரும்ப முடியாமல், வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருபவர்களை மீட்க மே.7ம் தேதி முதல் 13ம் தேதி வரை மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைக்காக 64 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி மீட்கும் திட்டமாக, அரசு அனைத்து வசதிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 

With inputs from PTI