துபாயில் காதலியைக் கொன்று காரில் வைத்து சுற்றிய இந்தியர்!! கொலைகுறித்து பரபரப்பு தகவல்

காதலிக்கும் இன்னொருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகக் குற்றவாளி கூறியுள்ளார். சடலத்துடன் சுமார் 45 நிமிடங்கள் துபாயை சுற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் காதலியைக் கொன்று காரில் வைத்து சுற்றிய இந்தியர்!! கொலைகுறித்து பரபரப்பு தகவல்

படத்தில் வருவதைப் போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • சடலத்துடன் 45 நிமிடங்களாக துபாயை சுற்றியுள்ளார் இந்திய இளைஞர்
  • கழுத்தை அறுத்து காதலி கொலை செய்யப்பட்டுள்ளார்
  • குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது
Dubai:

துபாயில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்று சடலத்துடன் இந்தியர் ஒருவர் காரில் சுற்றியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

காதலியின் சடலத்தை காரின் முன்பக்கத்தில் வைத்துக் கொண்டு 45 நிமிடங்களைத் துபாயைச் சுற்றியுள்ளார் அந்த இந்தியர். சடலத்தை காரில் வைத்துக் கொண்டவாறே ஓட்டலுக்குச் சென்று உணவும் வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலையில் நடந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

27 வயதுடைய அந்த இந்திய இளைஞர், இளம்பெண் ஒருவரை 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது காதலிக்கும் இன்னொருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அந்த இளைஞர். பின்னர் சடலத்தை வைத்துக்கொண்டு துபாயை சுற்றிய அவர், டெய்ராவில் உள்ள அல் முராக்காபாத் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள், 'எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர் காவல் நிலையத்திற்குள் வந்தபோது அவரது ஆடை முழுக்க ரத்தமாக இருந்தது. 

அரக்கத்தனமான முறையில் அந்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார். எங்களிடம் காதலியைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். சடலம் காரின் முன் இருக்கையிலிருந்தது. கழுத்து அறுக்கப்பட்ட அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. காரின் பின்னிருக்கையில் பெரிய கத்தி ஒன்று ரத்தக்கறை படிந்து கிடந்தது. 

5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தோம் எனக் குற்றவாளி கூறினார். சமீபத்தில், அவரது காதலி அவரை ஏமாற்றியதாகவும், இன்னொரு நபர்களிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். 

Newsbeep

இதன்பின்னர், காதலியின் குடும்பத்தினருக்குத் தன்னை ஏமாற்றியதற்குப் பரிகாரம் செய்யாவிட்டால் அவரைக் கொன்று விடுவேன் என்று மிரட்டல் இ மெயில் அனுப்பியுள்ளார். 

வணிக வளாகத்திற்கு வெளியே நடந்த வாக்குவாதத்தின் முடிவில் இந்தக்கொலை நடந்துள்ளது. இதன்பின்னர், அருகே உள்ள உணவகத்திற்குச் சென்று சாப்பாடு, தண்ணீர் பாட்டிலை ஆர்டர் செய்து சாப்பிட்டு, துபாயை 45 நிமிடங்கள் காரில் சுற்றியுள்ளான் குற்றவாளி. காரின் முன்னிருக்கையில் சடலம் இருந்தது. 

பின்னர் போலீசிடம் சரண் அடைந்து விடலாம் என்று எண்ணிக் காவல் நிலையத்திற்குக் குற்றவாளி வந்துள்ளார்' என்று தெரிவித்தனர்.

இந்திய இளைஞர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.