This Article is From Sep 27, 2019

'பணியிடத்திலேயே துன்புறுத்தலுக்கு ஆளானேன்' - பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ட்விட்டால் பரபரப்பு!!

ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்ஷா ஜோஷி வடக்கு டெல்லியின் முனிசிபல் கமிஷனராக பணியாற்றி வருகிறார். பெண் ஒருவர் அவருக்கு டேக் செய்த ட்விட்டுக்கு வர்ஷா அளித்த பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பணியிடத்திலேயே துன்புறுத்தலுக்கு ஆளானேன்' - பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ட்விட்டால் பரபரப்பு!!

ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்ஷா ஜோஷி.

New Delhi:

பணியிடத்திலேயே துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது என்பது, சமீபத்தில் அவர்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் மீடூ (#MeToo) ஹேஷ்டேக் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே தனக்கு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக கூறியிருக்கிறார். டெல்லியை சேர்ந்த அவர், தற்போது வடக்கு டெல்லி முனிசிபலில் கமிஷனராக பணியாற்றி வருகிறார். அவரை ட்விட்டரில் தொடர்பு கொண்ட ஸ்வாதி என்ற பெண் ஒருவர், 'குட்மார்னிங் மேடம். டெல்லியில் உள்ள இந்த தெருவில் நடமாடுவது என்பது கஷ்டமாக உள்ளது. இங்கு சிலர் நாடு முழுவதும் உட்கார்ந்து கொண்டு போதைப் பொருளை சாப்பிட்டு, சூதாட்டம் விளையாடி வருகின்றனர். இது எங்களுக்கு அசவுகரியமாக உள்ளது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

இந்த பதிவை ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு டேக் செய்த ஸ்வாதி, 3 புகைப்படங்களை இணைத்திருக்கிறார். இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்ஷா ஜோஷி அளித்த பதிலில், 'இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை வட இந்தியா முழுவதும் பெண்கள் சந்தித்து வருகிறார்கள். நானே எனது சொந்த அலுவலகத்தில் தொந்தரவை அனுபவித்துள்ளேன். அதனை செய்தவர்கள், தாங்கள் தொந்தரவு செய்கிறோம் என்பதை உணராமலே இருந்தனர். இதற்கு என்னதான் தீர்வு?' என்று பதில் அளித்துள்ளார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரி வர்ஷா ஜோஷி 1995-ம் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். 
 

.