This Article is From Jan 10, 2020

“என்ன கைது பண்ணனுமாம்…”- மேடையில் நக்கலாக சிரித்து உரையாற்றிய H.Raja!

திருநெல்வேலியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

“என்ன கைது பண்ணனுமாம்…”- மேடையில் நக்கலாக சிரித்து உரையாற்றிய H.Raja!

'நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக பலர் பேசுகிறார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்கள்'

பாஜக ஒருங்கிணைத்தப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா (H Raja), “நெல்லை கண்ணன் விவகாரத்தில் யாரெல்லாம் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்,” என்று பேசியுள்ளார். 

அவர் மேலும், “நெல்லை கண்ணன் பேசினார்… என்ன பேசினார், இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரின் சோலியை முடிக்க வேண்டும் என்று ஒரு சமூகத்தைத் தூண்டுகிறார். பின்னர் சொல்கிறார், இதற்காக தான் டெல்லியில் ஆள் பார்த்ததாக… இதைவிட இந்த நாட்டில் பெரிய குற்றம் என்பது இல்லவே இல்லை. 

நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக பலர் பேசுகிறார்கள். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்கள். குற்றத்துக்கு ஆதரவாக இருப்பதால், அது சம்பந்தமுடைய சட்டப் பிரிவுக்குக் கீழ் அவர்கள் மீதும் வழக்குப் போடலாம். அதை முதல்வருக்கு நான் கோரிக்கையாகவே வைக்கிறேன்.

jlogheao

நெல்லை கண்ணனைக் கைது செய்த உடனேயே என்னைக் கைது செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம்…” என்று சிரித்தார். பின்னர் எதுவும் பேசாமல் சில நொடிகள் கடந்த பின்னர், “நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக விவாதங்களில் கலந்து கொள்பவர்களைக் கூட கைது செய்யலாம். அதற்கான சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. நெல்லை கண்ணன் என்ன அவ்ளோ பெரிய அறிவாளியா. 4 நாள் சிறையில் களி சாப்பிட்டால் புத்தி வரும்,” என்று முடித்தார். 

திருநெல்வேலியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நெல்லை கண்ணன் கைதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல் முருகன், சிபிஐ, சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள், “பல நேரங்களில் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ள எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும். நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி. எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?” எனக் கேள்வி எழுப்பினார்கள். 

.