This Article is From Nov 15, 2019

180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்!

"இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விமான ஒழுங்கு அமைப்பான டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது."

180 பயணிகளுடன் புல்வெளியில் டேக்-ஆஃப் ஆன இந்திய Flight- பதறவைக்கும் ‘திக் திக்’ சம்பவம்!

பைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் லேண்ட் செய்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • Nagpur-Bengaluru GoAir விமானம்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது
  • Bengaluru விமானநிலையத்தில் வானிலை சரியாக இருக்கவில்லை எனத் தகவல்
  • பெங்களூருவில் புல்வெளியில் சறுக்கிச் சென்றுள்ளது விமானம்
Bengaluru:

180 பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் நிலைதடுமாறி சென்ற விமானம் ஒன்று, அபாயகரமான முறையில் டேக்-ஆஃப் ஆகியுள்ளது. விமானத்தை இயக்கிய பைலட்டை அரசு தரப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது. பதறவைக்கும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளன. 

GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 விமானம், நாக்பூரில் இருந்து கடந்த திங்கட் கிழமை டேக்-ஆஃப் ஆகியுள்ளது. பெங்களூருவில் அந்த விமானம் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால், விமானம் லேண்ட் ஆகும்போது, நிலைதடுமாறி ரன்-வேக்கு அருகிலிருந்த புல்வெளிக்கு சறுக்கிச் சென்றுள்ளது. 

இதைத் தொடர்ந்து பைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் லேண்ட் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.  

இந்த சம்பவம் குறித்து கோஏர் நிறுவனம், “11 நவம்பர், 2019 அன்று கோஏர் ஃப்லைட் ஜி8 811 நாக்பூரிலிருந்து பெங்களூருவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், பெங்களூருவிலிருந்து ஐதராபாத்திற்கு அந்த விமானம் இயக்கப்பட்டது. ஐதராபாத்தில் விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விமான ஒழுங்கு அமைப்பான டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.

.