This Article is From Sep 18, 2018

கோவா: அரசியல் சிக்கலுக்கு முடிவு கட்ட களம் இறங்கினார் அமித் ஷா : 10 தகவல்கள்

கோவாவில் ஆட்சியமைக்க காங். தீவிரம் - அரசியல் சிக்கலுக்கு முடிவு கட்ட களம் இறங்கினார் அமித் ஷா : 10 தகவல்கள்

கோவா:  அரசியல் சிக்கலுக்கு முடிவு கட்ட களம் இறங்கினார் அமித் ஷா : 10 தகவல்கள்

அமித்ஷா நேரடியாக கவனிக்கும் அளவுக்கு கோவாவில் பாஜகவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

Panaji:

கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ் கட்சி கவர்னரிடம் வலியுறுத்தியுள்ளது. கோவாவில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதனை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக கூட்டணி கட்சியான கோவா முன்னணியின் எம்.எல்.ஏவும் , அமைச்சருமான விஜய் சர்தேசாயை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கோவா அரசியல் சூழல் தொடர்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள்

1. கூட்டணி கட்சியான மகாராஷ்டிர கோமந்தக் எம்.எல்.ஏ. தவாலிகரை, துணை முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். இதற்கு மற்றொரு கூட்டணி கட்சி அமைச்சரான சர்தேசாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2. தவாலிகரை கோவா முன்னணி உள்பட பாஜகவின் மற்ற கட்சிகள் நிராகரித்துள்ளன. நிரந்தர தீர்வை ஏற்படுத்துமாறு கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையை வலியுறுத்தியுள்ளன.

3. தற்போது வரை பாஜகவுக்கு கோவா முன்னணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 6 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்கள்தான் கோவாவில் ஆட்சியை யார் பிடிப்பது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர்.

4. 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் காங்கிரசுக்கு 16-ம், பாஜகவுக்கு 14 உறுப்பினர்களும் உள்ளனர்.

5. 2017 தேர்தலில் காங்கிரசை விட குறைந்த இடங்களை பிடித்த பாஜக கோவா முன்னணி, எம்.ஜி.பி., 3 சுயேட்சை எம்எல்ஏக்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

6. மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று வருவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், முதல்வரே இல்லாமல் அரசு நடத்தப்பட்டு வருவதாக விமர்சித்துள்ளது.

7. கோவா முதல்வரை தவிர்த்து நகர்ப்புற அமைச்சர் பிரான்சிஸ் டிசோசா, மின்சாரத்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் ஆகியோரும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8. அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதால் கோவா அரசை கலைக்காமல் கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஆனால் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் இன்னும் கவர்னரை சந்தித்து பெரும்பான்மை குறித்து பேசவில்லை.

9. சட்டசபையை கலைத்து விட்டால் அதன் காரணமாக தேர்தல் நடத்தும்போது பெருமளவு பணம் செலவாகும் என எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் கூறியுள்ளார்.

10. காங்கிரசுடன் தொடர்பில் உள்ளார் என்ற விமர்சனத்தை கோவா முன்னணியின் எம்.எல்.ஏ. சர்தேசாய் மறுத்துள்ளார். கோவா விவகாரத்தில் பாஜக எந்த முடிவை எடுத்தாலும், நிரந்தர தீர்வுக்கு அது வழிவகுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

.