This Article is From Oct 15, 2018

கோவா மாநில பாஜகவின் இணையதளம் திருட்டு!

இணையதளத்தை திருடிய பின் அதில், "mailto:catch.if.you.can@hotmail.com". என்று பதிவிடப்பட்டிருந்தது

கோவா மாநில பாஜகவின் இணையதளம் திருட்டு!

கோவா மாநில பாஜகவின் பழைய இணையதளம் திருடப்பட்டுள்ளது.

Panaji:

திங்களன்று அடையாளம் தெரியாத நபர்களால் பாஜகவின் கோவா மாநில இணையதளம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட இணையதளத்தில், ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்று பதிவிடப்பட்டுள்ளது என்று கட்சியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தை திருடிய கும்பல் "டீம் பிசிஇ"-ஆக இருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. மேலும், முகமது பிலால் என்ற தனிநபரும் இணையதளம் திருடப்பட்ட பின், இணையதள பக்கத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இணையதளத்தின் திருடிய பின், அதில் "mailto:catch.if.you.can@hotmail.com" என்ற தகவல் பதிவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாஜவின் புதிய இணையதளம் பாதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய இணையதளம் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில், புகார் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 

.