அக்டோபர் 8-ம்தேதி உண்ணா விரத போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 86.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 79.08-க்கும் விற்பனையாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், அதனை பயன்படுத்தி தொழில் செய்யும் மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டீசலுக்கு மானியம் வழங்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணா விரதம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரமேஸ்வரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, அக்டோபர் 3-ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குகிறோம். அக்டோபர் 8-ம்தேதி உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. சர்வேதேச பிரச்னைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் எரிபொருள் விலை உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.