This Article is From Dec 28, 2018

அதிநவீன தொழிநுட்பம் கொண்ட புதிய பாம்பன் ரயில்வே பாலம்; வீடியோ உள்ளே!

புதிய பாலம் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், வீடியோ வெளியிட்டுள்ளார்

அதிநவீன தொழிநுட்பம் கொண்ட புதிய பாம்பன் ரயில்வே பாலம்; வீடியோ உள்ளே!

ராமேஸ்வரத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரயில்வே பாலம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்தப் பாலம் பழையதாகிவிட்ட காரணத்தினாலும், அடிக்கடி பழுது பார்க்க வேண்டியிருப்பதாலும், அதற்கு பதிலாக புதிய பாலம் பொருத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்பட்டு வந்தது.

 

 

இந்நிலையில், புதிய பாலம் எப்படி செயல்படும் என்பதை விளக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அமைச்சர், ‘எப்போதாவது செங்குத்தாக நகரும் பாலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ராமேஸ்வரத் தீவை, நிலத்துடன் இணைக்கும் பாம்பன் பாலத்தில் விரைவில், அப்படியொரு தொழில்நுட்பம் கொண்ட பாலம் அமைக்கப்படும்' என்று பதிவிட்டுள்ளார்.

.