‘மொத்த உலகுக்கும் ராமர் சொந்தமென்றால், அயோத்யாவில் எதற்கு கோயில்!’- பரூக் அப்துல்லா

ராமர் கோயில் விவகாரம் தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், ஜம்மூ - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘மொத்த உலகுக்கும் ராமர் சொந்தமென்றால், அயோத்யாவில் எதற்கு கோயில்!’- பரூக் அப்துல்லா

‘மொத்த உலகுக்கும் ராமர் சொந்தமென்றால், அயோத்யாவில் ராமர் கோயில் கட்டத் துடிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் அப்துல்லா


New Delhi: 

ராமர் கோயில் விவகாரம் தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், ஜம்மூ - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ‘மொத்த உலகுக்கும் ராமர் சொந்தமென்றால், அயோத்யாவில் ராமர் கோயில் கட்டத் துடிப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும், ‘கடந்த மாதம் உச்ச நீதிமன்றம், ஜனவரியில் ராமர் கோயில் குறித்த வழக்கை விசாரிக்கும் என்று கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டாமா?' என்றார்.

அவர் மேலும், ‘பிகாரின் சீதாமர்ஹியில், சீதைக்கு ஏன் கோயில் கட்டக் கூடாது. உச்ச நீதிமன்றம் சொல்லும் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்று அனைத்து முஸ்லிம்களும் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கையில் ராமர் கோயில் குறித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றம் தான்' என்று விளக்கினார்.

அப்துல்லாவின் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியப் புள்ளி பவன் வெர்மா, ‘ராமர் எல்லாருக்கும் சொந்தமானவர் என்றாலும், அவருக்கு அயோத்யாவில் கோயில் கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்துக்கள் அயோத்யாவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று நினைத்தால், அதைக் கட்டுவதில் என்ன பிழை இருக்கிறது.

இப்போது இருக்கும் பிரச்னை கோயில் கட்டுவதில் இல்லை. அது எப்படி கட்டப்படப் போகிறது என்பதில் தான் இருக்கிறது. வலுக்கட்டாயமாக கட்ட உள்ளோமா, வன்முறையைப் பயன்படுத்தி கட்ட உள்ளோமா, அல்லது அனைவரின் சம்மதத்துடன் கட்ட உள்ளோமா என்பதில் தான் தீர்வு காணப்பட வேண்டும்' என்று பதில் அளித்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................