மங்கோலியா கே.எஃப்.சியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்

கடந்த வாரம் முறையாக உணவு தரக்கட்டுப்பாடு சோதனை இல்லாததால் நடைபெற்றது. உணவகத்தில் உணவு உண்ட 247 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மங்கோலியா கே.எஃப்.சியில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்

கே.எஃப்.சி 2013ல் தலைநகர் உட்பட 11 இடங்களில் மங்கோலியாவில் துவங்கப்பட்டது.


ULAANBAATAR: 

மங்கோலியா, தற்காலிகமாக கே.எஃப்.சி உணவகங்களை மூடச்சொல்லி உத்தரவிட்டுள்ளது. உணவு கெட்டுவிட்டதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாலும், 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் ஃபாஸ்ட் புட் நிறுவனமான கே.எஃப்.சிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் உலான்பத்தாரில் கடந்த வாரம் முறையாக உணவு தரக்கட்டுப்பாடு சோதனை இல்லாததால் நடைபெற்றது. உணவகத்தில் உணவு உண்ட 247 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தண்ணீரில் பாக்டீரியா கலந்திருந்ததே இதற்கு காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகளில் கூறப்பட்டது.

கே.எஃப்.சி 2013ல் தலைநகர் உட்பட 11 இடங்களில் மங்கோலியாவில் துவங்கப்பட்டது. அதனை தவன் போக்ட் குழுமம் ப்ரான்ஸைசியாக ஏற்று நடத்தி வருகிறது.

இதற்காக கே.எஃப்.சியின் செய்தி தொடர்பாளர் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மிகவும் வருந்துவதாகவும் கூறியுள்ளார். 

கே.எஃப்.சி மங்கோலியா அரசின் விசாரணைக்கும், பரிந்துரைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மங்கோலியாவில் உள்ள அனைத்து கே.எஃப்.சி உணவகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு மக்களின் உடல்நலக்குறைவுக்கான காரணம் கண்டறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தவன் போக்ட் குழுமம் தனியாக இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இதற்கு குறைவான தரகட்டுப்பாடே காரணம் என்று கூறியுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................