This Article is From Dec 22, 2018

டெல்லி - வாரணாசி இடையே பயணிக்கும் முதல் ரயில் 18!

‘ரயில் 18’, டெல்லி முதல் வாரணாசி இடையே தனது முதல் போக்குவரத்து பயணத்தை தொடங்கும், என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

டெல்லி - வாரணாசி இடையே பயணிக்கும் முதல் ரயில் 18!

ரயில்-18 வரும் டிசெம்பர் மாதம் 29, பிரதமர் நரேந்திர மோடியால் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

New Delhi:

மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் பிரமாண்டமான ‘ரயில் 18', டெல்லி முதல் வாரணாசி இடையே தனது முதல் போக்குவரத்து பயணத்தை தொடங்கும், என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே துறை அமைச்சர் ராஜேன் கோஹெயின்  கூறுகையில், சென்னையின் ஒருங்கிணைந்த ரயில்பெட்டிகளை உருவாக்கும் தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்)  2018-19 ஆம் ஆண்டுகளில் 36 ரயில் பெட்டிகள் மேலும் தயாரிக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் ‘ 2018-19 ம் ஆண்டுக்குள் (ஐ.சி.எஃப்) 36 ரயில் பெட்டிகள் திறக்கப்படும் என்னும், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 பெட்டிகளை தயாரித்துள்ளது எனவும், டெல்லி - வாரணாசி இடையே ரயில்18 முதல் பயணம் அறிமுகப்படுத்துப்படும்'என தெரிவித்தார்.

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் 18ல் பல முன்னனி தரம் கொண்ட தொழிநுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.ஜிபிஎஸ் தகவல் அமைப்பு, சி.சி.டி.வி, பயோ-கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது.

லக்னோவில் உள்ள ரிசர்ச் டிசையின் ஆண்ட் ஸ்டான்டார்டு அமைப்பு (RDSO) ரயில்18-ல் பல கட்ட பரிசோதனைகள் நடத்தியுள்ளது. மிகவும் அவசியமான பாதுகாப்பு சோதனைகளையும் உள்ளடக்கியது என கோஹெயின் தெரிவித்தார்.

ரயில்-18 வரும் டிசம்பர் மாதம் 29ல், பிரதமர் நரேந்திர மோடியால் கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

.